சமூக ஊடகங்களில் நேரடி பேச்சுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் மோகன்.ஜி. வித்தியாசமான மற்றும் விவாதத்திற்குரிய கருத்துக்கள் மூலம் பலராலும் பேசப்பட்டு வருகின்றார். சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்த கருத்துக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
அந்தப் பேட்டியில், இயக்குநர் மோகன்.ஜி கூறியதாவது, "நான் ஹெச். ராஜா என்பவரை நேரில் சந்திக்காதிருந்தால், பிராமணர்கள் என்றாலே தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்துடன் தான் இருந்திருப்பேன். ஆனால் அவரை நேரில் சந்தித்தபோது, பல விடயங்கள் தெரிய ஆரம்பித்தன" என்றார்.
மேலும், சமூகத்தில் பன்முகத் தன்மை உள்ள போதும், சிலர் பிராமணர்களை மட்டும் குறிவைத்துப் பேசுகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் இன்றும் பிராமணர்கள் ஒரு அழிந்து போகும் இனமாக இருக்கின்றனர் என்று கவலையுடன் கூறினார்.
பொதுவாக சினிமா உலகில் சமூக, அரசியல் கருத்துகள் பற்றிப் பேசுவது சிலருக்கே உரிமையாக இருந்தது. தற்போது முகம் மறைக்காத சுயநிலை பேச்சாளர்கள் அதிகரித்துள்ளனர். அந்தவகையில் இயக்குநர் மோகன்.ஜி அவர்களில் முக்கியமானவராக திகழ்கின்றார்.
Listen News!