• Jun 07 2026

லஞ்சம் கொடுத்து வசமாக சிக்கிய விஜயா!மனோஜ்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த தங்கச்சி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், ரோகிணிக்கு ஆதரவு தரவேண்டாம் என்று பெண்கள் அசோசியேஷனின் தலைவிக்கு பணம் கொடுக்கிறான். ஆனால் அவர் வீடியோவை எடுத்துவிட்டு, பணத்தை விஜயாவிடம் கொடுத்துவிட்டு திட்டி விட்டுச் செல்கிறார்.

அதற்கு பின் வீட்டுக்கு வந்த விஜயாவை அண்ணாமலை திட்டுகிறார். மேலும் இனி இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சொல்கிறார். முத்து அவரை சந்தித்து எப்படியாவது ரோகிணி பற்றிய உண்மையை தெரியப்படுத்துமாறு கூறுகிறார்.

அதற்கு பின்பு முத்தும் மீனாவும் அந்த பெண்மணியை பார்க்க அவரது அலுவலகத்திற்கு செல்கின்றனர். அங்கு ஏற்கனவே இரண்டு பெண்கள் தங்களுடைய மாமியார் பற்றி முறைப்பாடு செய்துகொண்டுள்ளனர். அந்த நேரத்தில் சம்பந்தப்பட்டவர்தான் வந்து பேச வேண்டும் என்று திட்ட, முத்தும் மீனாவும் திரும்பி வந்துவிடுகின்றனர்.


அதற்கு பின்பு ஷோரூமுக்கு சென்று மனோஜுக்கு ஆலோசனை கூறுகின்றனர். ஒரு முறை அவரை சென்று சந்திக்குமாறு கூற மனோஜ் முடியாது என்று கூறுகிறார். ரவியும் சொல்லிப் பார்க்கிறார். ஆனாலும் மனோஜ் "நான் பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்" என்று கூறுகிறார்.

அதற்குப் பிறகு முத்துவுக்கு கிடைத்த தங்கச்சி வீட்டுக்கு வந்து அந்த அசோசியேஷன் பற்றி விசாரித்ததாகவும், முதலில் அவர்கள் நோட்டீஸ் அனுப்புவார்கள், அதற்கு பின்பு பொதுமக்களுக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்துவார்கள், பின்பு போலீஸ் கேஸில் உங்களுடைய அம்மா உள்ளே போவார் என மனோஜை பயமுறுத்துகிறார். இதுதான் இன்றைய எபிசோட்

Advertisement

Advertisement