• Sep 21 2024

விஜய் டிவியின் BEST PLAYERS OF BIGGBOSS 7..! இறுதியில் வெற்றி வாகை சூடப்போவது இவர் தானா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் BEST PLAYERS OF BIGGBOSS 7 என பதிவிட்டு புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளது விஜய் டிவி..

அதன்படி, குறித்த புகைப்படத்தில் சரவண விக்ரம், விசித்ரா, அர்ச்சனா மற்றும் தினேஷ் உள்ளடங்கிய புகைப்படமொன்றை  வெளியிட்டுள்ளனர். குறித்த நால்வரும் இறுதி சுற்றுக்கு செல்வார்களா? வெற்றிக் கிண்ணத்தை அள்ளுவார்களா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், தற்போதைய கணிப்பின் அடிப்படையில் தினேஷ் மற்றும் அர்ச்சனா இறுதி வரை செல்வார்கள் என பலரும் எதிர்பார்கின்றனர்.பொறுத்திருந்து பார்ப்போம் இறுதியில் யார் வெற்றி வாகை சூடப்போறார் என்று...


 

Advertisement

Advertisement