• May 19 2024

விஜய் சேதுபதியின் மாமனிதன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் , சினிமாவை கலக்கி வரும் நடிகர் தான் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் “ஃப்பா ” என்ற சொல்லின் மூலம் பிரபலமானார்.

இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் மாபெரும் வசூலையும் குவித்தார்.

இந்நிலையில் தொடர்ந்து 4வது முறையாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். மேலும் குரு சோமசுந்தரம்,சாஜி சென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட இந்தப்படம் கொரோன அச்சுறுத்தல் காரணமாக மற்றும் நிதி நெருக்கடி நிலையினால் ரிலீஸாகாமல் இருந்தன.இதையடுத்து 4 முறை தள்ளி போன இந்த படத்தின் வெளியீட்டால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.

அண்மையில் மாமனிதன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற, இந்நிலையில் தற்போது மாமனிதன் திரைப்படம் ஜூன் 24ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement