• May 08 2024

இனி… அந்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்; நயன்தாரா போட்ட கண்டிஷன் -புலம்பும் தயாரிப்பாளர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கடந்த 7 ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை காதாலித்து வந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

பல கட்டுப்பாடுகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ரஜினி, அஜித் குடும்பத்தினர், கலா மாஸ்டர், விக்ரம் பிரபு என்று பல பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அத்தோடு திருமணத்தின் புகைப்படங்களை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தை சுற்றி வலம் வந்தது.

ரசிகர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு டுவிட்டர், இன்ஸ்டா, தனது செல்போனில் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், திருமணம் முடிந்த பிறகு, தயாரிப்பாளர்களுக்கு சில கண்டிஷன்களை போட்டுள்ளாராம் நயன்தாரா

மேலும் இனி நடிக்கும் படங்களில் ஹீரோக்களுடன் முத்த காட்சிகள், படுக்கை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் நயன்தாரா கூறியுள்ளாராம்.நயன்தாராவின் இந்த முடிவு, தயாரிப்பாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement