’பாகுபலி’ ’பாகுபலி 2’ மற்றும் ’ஆர்.ஆர்.ஆர்
ஆகிய  அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய
இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி அடுத்ததாக மகேஷ்பாபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட
பணிகளை கடந்த சில மாதங்களாக நடைபெற்று
வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அமேசான் காடுகளில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதுவரை இல்லாத அளவில் மிகவும் பிரமாண்டமாக இந்த படத்தை அவர்
இயக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. 
இந்த நிலையில் இந்த படத்தில் வெளிநாட்டு
நடிகை ஒருவர்தான் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படும் நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி பிரபல பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் இந்த படத்தில் நடிக்க
பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அனேகமாக அவர் இந்த படத்தின்
வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும்
கூறப்படுகிறது.
 
எஸ்எஸ் ராஜமெளலி படம் என்றாலே பான்
இந்திய படம் என்று உறுதி
செய்யப்பட்டுள்ளதால் தென்னிந்திய நடிகர்கள், பாலிவுட் நடிகர்கள் ஆகியவர்கள் இந்த படத்தில் இணைவார்கள்
என்றும் ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே இந்த படத்தில் நடிக்க
இருப்பதாகவும் கூறப்படுகிறது. வழக்கம் போல் இந்த படத்தின்
இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி தான் என்பதும் இந்த
படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல்
தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
பிரபல பாலிவுட் நடிகராக ஹிருத்திக் ரோஷன் பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக இருக்கும் நிலையில் அவர் தென்னிந்திய படத்தில்
நடிப்பது, அதுவும் வில்லனாக நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு மகேஷ்பாபுவை விட பல மடங்கு
சம்பளம் கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!