தளபதி விஜய் நடித்த சுக்ரன் திரைப்படத்தில் இசை அமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி
இவர் அமைத்த இசைகளில் ஆத்திச்சூடி, டைலாமோ, நாக்குமுக்கா பாடல்கள் மூலம் திரையுலகில் பிரபலமானார். இவருடைய பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் பரவி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.
இசையில் மட்டுமன்றி நடிப்பிலும் தன்னுடைய கை வரிசையை காட்டி வருகின்றார் நடிகர் விஜய் ஆண்டனி .இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இத்திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்குகிறார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் மேலும் சரத்குமார், சரண்யா, பொன்வண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் மூத்த நடிகர் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது .ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.
இந்தியாவில் இதுவரை யாரும் செல்லாத இடங்களான வட இந்தியாவில் டையூ டாமன் ஆகிய பகுதிகளில் சென்று படப்பிடிப்பை நடத்தி வந்த நிலையில் இப்போது முழுவதுமாக படப்பிடிப்பை முடித்துள்ளனர். இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். படக்குழுவினர் இப்புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளனர்.
பிற செய்திகள்
- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய மூர்த்தி..?இது தான் காரணமா.. ஷாக்கான ரசிகர்கள்….!
- நடிகை ராதிகா சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..? ஷாக்கான ரசிகர்கள்..!
- திடீரென மன்னிப்பு கேட்ட அஜித்-நடந்தது என்ன..? வைரலாகும் புகைப்படம்..!
- குத்தாட்டம் போட்ட இயக்குநர் பாரதி ராஜா-வைரலாகும் வீடியோ..!
- பிரபல நடிகரின் படத்தை 15தடவைக்கு மேல் பார்த்திருக்கும் சிவகார்த்திகேயன்-யாருடைய படம் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!