• May 13 2024

ரசிகர்களுடன் படம் பார்க்க சென்ற நயன்தாராவின் கையை பிடித்த நபர்- அணைத்தபடி அழைத்துச் சென்ற விக்னேஷ் சிவன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமந்தா , கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், மற்றும் கலா மாஸ்டர் என இன்னும் பல பிரபலங்களின் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல் .

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காத்து வாக்குல 2 காதல் திரைப்படத்தை பார்வையிட தேவி திரையரங்கு சென்று அங்கு ரசிகர்களுடன் அமர்ந்திருந்தனர் .

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காரில் இருந்து இறங்கிய போது அவரது ரசிகர்கள் பலர் அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்தனர் . அப்போது ரசிகர்களின் கூட்டம் அதிகரித்தமையால் அக் கூட்ட நெரிசலில் இருந்து கடந்து செல்ல விக்னேஷின் கையை பிடித்த போது நயனின் கையை அவரது ரசிகர் பற்றிக்கொள்ள அவர் பயந்து கையை எடுத்துக்கொண்டார்.

இதை அவதானித்த விக்னேஷ் சிவன் நயன்தாராவை அணைத்தபடி அழைத்துச் சென்றார் . இது குறித்த வீடியோ பல இணையத்தளங்களில் வைரலாகி வருவதும் முக்கியமாகும்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement