• May 05 2024

மனைவி மற்றும் மகன்களுடன் இணைந்து கோலாகமாக தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய விக்னேஷ்சிவன்- வெளியாகிய பேர்த்டே கிளிக்ஸ்

stella / 7 months ago

Advertisement

Listen News!


தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன். தொடர்ந்து, சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார்.


இதற்கிடையில், இவர் இயக்கிய நானும் ரெளடி தான் படத்தில் நயன்தாரா நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின் கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். பதிவு திருமணம், வாடகைத் தாய் என பல சர்ச்சைகளில் இருவரும் சிக்கினர்.


தற்பொழுது வரை ஹாட் டாப்பிக்கில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் கேரியரில் கவனம் செலுத்தினாலும், குடும்ப வாழ்க்கையிலும் நேரம் செலவழித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இன்றைய தினம் விக்னேஷ் சிவன் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். தன்னுடைய மனைவி மற்றும் மகன்களுடன் இணைந்து கேக் வெட்டி சிறப்பித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement