• May 04 2024

விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் ஷுட்டிங் செட்டில் இருந்து லீக்கான வீடியோ- அதிர்ச்சிக்குள்ளான படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் தான் விஜய் ஆண்டனி. இவர் தற்பொழுது கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது வள்ளி மயில் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.

கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் படங்களை கொடுத்து வரும் சுசீந்திரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் சத்யராஜ், பாரதிராஜா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தெலுங்கில் ‘ஜதி ரத்னலு’ படத்தின் மூலம் பிரபலமான ஃபரியா அப்துல்லா இந்த படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர்களுடன் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரித்து வருகிறார்.

அத்தோடு இப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கூத்தம்பூண்டி பகுதியில் தொடங்கியது. தற்போது இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு கிராம சந்தை போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின் வீடியோ ஒன்று தற்போது லீக்காகி உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/ccuEHJesbKM

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement