• Jan 19 2025

சன் டிவியில் கடும் அவஸ்தை படும் வெங்கடேஷ் பட்... தாமுவும் இப்படி தான் பல்டி அடித்தாரா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி மற்றும் மீடியா மேஷனுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து விலகி சன் டிவிக்கு தாவி சென்றார். ஆனாலும் தனக்கும் விஜய் டிவிக்கும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. என்னை  வளர்த்து விட்டது மீடியா மேஷன் தான் அது எங்க போனாலும் நானும் அங்கே செல்வேன் என காரணம் ஒன்றையும் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து வெங்கடேஷ் எங்கே நிகழ்ச்சி பண்ணுகின்றாரோ அங்கே நானும் சென்று விடுவேன் என சொல்லி இருந்தார் செப் தாமு. ஆகவே இவர்கள் இருவரையும் வைத்து பிரமாதமான நிகழ்ச்சிய ரெடி பண்ணலாமென்று சன் டிவி பிளான் போட்டது. ஆனால் விஜய் டிவியும் இவர்கள் இருவரிடமும் பேரம் பேசி உள்ளதாம்.

அதற்கு வெங்கடேஷ் பட் 20 வருஷத்துக்கு மேல் இருக்கும் மீடியா மேஷனுக்கு நன்றி செலுத்தும் விதமாக சன் டிவிக்கு சப்போர்ட் பண்ணி விட்டார். ஆனால் தாமு சன் டிவிக்கு மறுப்பு தெரிவித்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்றார்.


சன் டிவியில் வெங்கடேஷ் பட்டுக்கு ஜோடியாக தாமுவை தவிர வேறு யார் வந்தாலும் ஒர்க் அவுட் ஆகாது என்பதினால் அவர் தனியாகவே நிகழ்ச்சியை கொண்டு நடத்துகிறார். கடந்த வாரம் ஆரம்பமான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் புதுப்புது ட்ரிக்ஸ்களை போலோ பண்ணி வந்தார் வெங்கடேஷ் பட்.

இந்த நிலையில், அவர் தனியாக  என்டர்டைன்மென்ட் பண்ணுவதால் தொண்டை கட்டும் அளவிற்கு அவஸ்தைப்பட்டு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் அவரைத் தவிர ஏனைய கோமாளிகள், குக்குகள் யாரும் மக்களை கவரும் அளவிற்கு எதுவும் பண்ணவில்லை என்று சொல்லலாம். அதேபோல வெங்கடேஷ் பட்டும் விஜய் டிவியில் வாங்கின சம்பளத்தை விட சன் டிவியில் மிகவும் குறைவாகத்தான் வாங்குகிறேன் என்று பேட்டி ஒன்றிலும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement