• Jul 03 2025

என்னையும் தேவயானியையும் ஒப்பிடாதீங்க..! வனிதாவின் அதிரடிக் கருத்து வைரல்...

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறப்பான பாத்திரங்களாலும், திடமான பேச்சு மற்றும் தன்னம்பிக்கை என்பவற்றாலும் மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கியவர் நடிகை வனிதா விஜயகுமார். சினிமா நடிப்பில்  மட்டுமல்லாது  தனிப்பட்ட வாழ்க்கையின் சவால்கள், டீவி நிகழ்ச்சிகளின் பங்களிப்பு எனப் பலவகையிலும் பரவலாக பேசப்பட்டவர்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற ஒரு நேர்காணல் கலந்து கொண்ட வனிதா, தனது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை பகிர்ந்திருந்தார். குறிப்பாக, தனது மகள் ஜோவிகாவை பெற்றெடுத்த காலத்தில் தான் எதிர்கொண்ட போராட்டங்கள் மற்றும் நடிகை தேவயானியுடன் தன்னை ஒப்பீடு செய்தல் குறித்து சிறப்பாக பேசியிருந்தார்.

வனிதா தனது பேட்டியில், “ஜோவிகாவை டெலிவரி பண்ணும் வரை நான் ஒருத்தியா தான் இருந்தேன். அந்த நேரத்தில் எந்த துணையும் இல்லாம வாழ்க்கையில தனியா நின்னு போராடினான். ஆனா அந்த வலியை நான் fun ஆக எடுத்துக்கிட்டு மனம் உடையாமல் இருந்தேன்.” என்றார்.


அத்துடன் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வனிதா – தேவயானி ஒப்பீடு குறித்து பெருகி வரும் கருத்துகளுக்கும் சிறப்பாக பதிலளித்திருந்தார். அதன்போது, “அவங்களுக்கும் ரெண்டு பொண்ணுங்க… எனக்கும் ரெண்டு பொண்ணுங்க. ஆனா ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கை வேற.

அவங்க பொண்ணு மேடையில பாடுறா… என் பொண்ணு மேடையில டான்ஸ் பண்ணுறா... அதுக்காக ஒப்பீடு பண்ணகூடாது. ஒவ்வொருவருக்கும் திறமை, ஆர்வம் என்பன இருக்கும். அவற்றை ஒப்பீடு செய்வது தவறான விடயம்." எனக் கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement