• Jan 15 2025

தலைகீழான பாக்கியா வீடு... பாக்கியா சொன்ன ஒரு வார்த்தை! ஏற்றுக் கொண்ட எழில்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எழில் வீட்டை விட்டு கிளம்பி பெட்டியுடன் வெளியே வர, ராமமூர்த்தி, ஈஸ்வரி போக வேண்டாம் என தடுக்கின்றார்கள் ஆனாலும் எழில் அவர்களை கட்டிப்பிடித்து நான் எப்பவும் உங்களை பார்ப்பேன் நான் வீட்டில் இருந்தால் நிம்மதி இருக்காது என ராமமூர்த்தியையும் ஈஸ்வரியையும் கட்டிப்பிடித்து சொல்கின்றார்.

ஈஸ்வரி என் மேல் பழி விழவேண்டும் என்று தானே நீ இப்படி பண்ற கைக்குழந்தையோட வீட்டை விட்டு துரத்திட்டா என்ற பெயர் வர வேண்டும் என்று தானே இப்படி செய்கிறா?  நீ போகக்கூடாது என்று சொல்லி ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக் கொள்கிறார்.

அதன்பின் பாக்கியவுடன் சென்று பாக்கியாவை கட்டிப்பிடிக்க பாக்கியாவும் எழில், அமிர்தா, நிலாவை கட்டிப்பிடித்து விட்டு கிளம்பு எழில் என சொல்லுகின்றார்.


இதனால் எழில் எல்லோரும் வீட்டை விட்டு போக வேண்டாம் என சொல்லவும் அமிர்தா நிலாவை கூட்டிக்கொண்டு பைக்கில் வீட்டை விட்டு வெளியேறுகின்றார்.

அதன் பின்பு பாக்கியா விழுந்து விழுந்து அழுகின்றார். வெளியே வந்த ஈஸ்வரி அவன போக விட்டுட்டீங்களா என பேசியதோடு மட்டுமில்லாமல் பாக்யாவிடம் சென்று ஏன் இப்படி செய்தாய்? நான் சொன்னதில்லை என்ன தப்பு இருக்கு? உன்னால தான் அவன் வீட்டை விட்டு போயிட்டான் என பேசுகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement