தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் வரிசையில் முன்னும் பின்னும் இடம் மாறாத ஒரு நடிகர் என்றால் முதலிடத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இரண்டாம் இடத்தை உலக நாயகன் கமல்ஹாசனும் தான்.தமிழ் திரையுலகில் புதுமைகளை அறிமுகம் செய்யும் கமல்ஹாசன் திரையில் அறிமுகமான நாள் இன்று.
ஆம் "களத்தூர் கண்ணம்மா" திரைப்படத்தில் செல்வம் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் அவரின் முயற்சி மற்றும் உழைப்பினால் தமிழ் சினிமாவின் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் ஓர் இலக்கணமாகவே மாறினார்.
12 ஆகஸ்ட் 1960 இல் வெளியான "களத்தூர் கண்ணம்மா" திரைப்படம் இன்றோடு 64 வருடங்களை நிறைவு செய்திருக்கும் நிலையில் உலக நாயகன் தனது 65 வது திரையாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். "களத்தூர் கண்ணம்மா" திரைப்படத்திற்காக கமலஹாசன் 6 வயதில் குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்க விருதையும் வென்றார் எனபது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 230 இற்கும் மேலான படங்களை நடித்திருக்கும் உலக நாயகனின் இறுதியாய் வெளிவந்த திரைப்படமான "இந்தியன் 2" எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்காத போதிலும் அடுத்து வெளிவர இருக்கும் படங்களான "இந்தியன் 3" மற்றும் "தக் லைப்" படங்களுக்கான படப்பிடிப்பு வேலைகளில் இறங்கியுள்ளார் உலகநாயகன்.
65 Years, countless unforgettable characters and an undying Passion for Cinema. #Ulaganayagan Kamal Haasan's legacy is unparalleled.
Celebrating the one who revolutionized Indian cinema @ikamalhaasan #65YearsofKamalism #CinematicGenius#KamalHaasan@RKFI @turmericmediaTM… pic.twitter.com/KAw8Vy0PW5
Listen News!