• Jul 24 2024

’இந்தியன் 2’ டிரைலருக்கு குவியும் நெகட்டிவ் விமர்சனம்.. திட்டமிட்டப்பட்டதா? ஷங்கருக்கு போதாதா காலமா?

Sivalingam / 3 weeks ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரெய்லர் கமல் ரசிகர்களை கவர்ந்தாலும் பொதுவான ஆடியன்ஸ்களை இந்த ட்ரெய்லர் கவரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களில் இந்த ட்ரெய்லருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

’இந்தியன்’ படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் அம்சமாக இருக்கும் என்றும் குறிப்பாக இந்தியன் தாத்தாவின் காட்சிகள் மிகவும் இயல்பாக இருக்கும் என்றும் ஆனால் ’இந்தியன் 2’ திரைப்படத்தில் இந்தியன் தாத்தாவின் காட்சிகள் செயற்கைத்தனமாக இருப்பதாக கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

பிரம்மாண்டம் மற்றும் விதவிதமான கெட்டப் மட்டும் இருந்தால் போதுமா? படத்தின் கதையில் அழுத்தம் வேண்டும் என்றும் ’இந்தியன்’ அளவுக்கு ’இந்தியன் 2’ படத்தின் கதை விறுவிறுப்பாக இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது என்றும் ட்ரைலரை பார்த்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ’இந்தியன் 2’ படத்தில் ட்ரெய்லருக்கு ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டு நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர் என்றும் ஆனால் ட்ரெய்லர் சூப்பராக இருக்கிறது என்றும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெரும் என்றும் கமல் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மொத்தத்தில் ஜூலை 12ஆம் தேதி இந்த படம் வெளிவந்த பின்னர் கமல் ரசிகர்களையும் தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா என்பதை தெரியும்.

Advertisement

Advertisement