• Jan 19 2025

TVK தலைவர் விஜயின் X தல பதிவு! கருணையை உலகுக்கு எடுத்து கூறுபவர்கள் இஸ்லாமியர்களே!முழுமையான பதிவு இதோ

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

உலகம் எங்கும் உள்ள முஸ்லிம்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் பல அரசியல் வாதிகள் , சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது ரமலான் வாழ்த்துக்களை முஸ்லீம் சமூகத்தினருக்கு தெரிவித்து வருகின்றனர். அவ்வாறே TVK தலைவர் விஜயும் X  தலத்தில் பதிவொன்றை போட்டுள்ளார்.


தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருபவர்  தளபதி விஜய் ஆவர். இவர் சமீபத்தில் தான் சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் , இனி முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் கூறி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியையும் ஆரம்பித்துள்ளார்.


குறித்த TVK கட்சியின் X தளத்திலேயே வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் "புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறி உள்ளார். 

அந்த பதிவு இதோ 




Advertisement

Advertisement