• Sep 17 2025

மணமகனாக ட்ரெண்டாகும் TTF வாசன்...!வைரலாகும் ப்ரீ-வெட்டிங் ஷூட் புகைப்படங்கள்...!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

மோட்டார் சைக்கிள் சாசக யூடியூப் பிரபலம் TTF வாசன் சமீபத்தில் தனது திருமணத்தை நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி மற்றும் சந்தோசம் கலந்த தகவலை பகிர்ந்திருந்தார். 


தற்போது அவரது ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் புகைப்படத்தில், மணமகள் பாரம்பரிய உடையிலும், மணமகனான TTF வாசன் அன்புடன் அவரின் காலில் மெட்டி அணிவித்து வைக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. 


அந்தப் புகைப்படம் பல ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள், “சினிமா ஸ்டைல் ரொமான்ஸ்,” “சரியான லவ் ஹஸ்பண்ட் மெட்டீரியல்,” போன்ற கருத்துகளுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


TTF வாசன் தனது யூடியூப் வீடியோக்களால் பெரும் ரசிகர் வட்டத்தை பெற்றிருப்பதோடு, தற்போது அவரது திருமண புகைப்படங்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

Advertisement

Advertisement