• May 20 2024

'நாளை படம் தான் ரிலீஸ் ஆகாது பாட்டையாவது கேட்போம்'- யானை படம் பற்றிய புதிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சாமி ,சண்டைக்கோழி எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் தான் இயக்குநர் ஹரி. இவரது இயக்கத்தில் இறுதியாக சாமி 2 என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தனது மச்சினனும் நடிகருமான அருண் விஜய்யை வைத்து யானை என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்து வருவதோடு பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி .வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நாளைய தினம் இப்படம் வெளியாகும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கமலின் 'விக்ரம்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் படத்தை ஜூலை 1-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் 'யானை' படத்தின் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சண்டாளியே' பாடலின் லிரிக் வீடியோ நாளைய தினம் ஜீன் 17ம் திகதி மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement