சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், அம்மா வீட்டிற்கு வந்த மீனாவிடம், அவரது நண்பிகள் நடந்த விஷயங்களைப் பற்றி விசாரிக்கின்றனர். இவர்களிடம் ஏன் உண்மையை சொன்னா? மேலும் பிரச்சனை பெரிதாகிவிடும் என நினைத்த மீனா, சத்யாவை கடுமையாக திட்டுகிறார்.
அதன்பின், பூ ஆர்டர் இருப்பதால் கிரிஷ் படிக்கும் பள்ளிக்கு சென்று கொடுத்து வருமாறு மீனா சத்யாவிடம் கூறுகிறார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட, சத்யா மற்றும் மீனாவின் நண்பிகள் சேர்ந்து ஒரு திட்டத்தை போடுகின்றனர்.
அதே நேரத்தில் ரோகிணிக்கு வக்கீல் மூலம் டிவோஸ் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதைப் பார்த்து அவரது தாய் கதறி அழ, என்ன நடந்தாலும் நான் மனோஜ் கூட தான் வாழ்வேன், இந்த முடிவை யாராலும் மாற்ற முடியாது என ரோகிணி உறுதியாக தெரிவிக்கிறார்.
பின்னர் கிரிஷை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பும் வழியில், சத்யாவும் மீனாவின் நண்பிகளும் ரோகிணியை வாகனத்திற்குள் ஏற்றி தாறுமாறாக அடிக்கின்றனர். இதையடுத்து அவர்களை மீனா, முத்துவிடம் அழைத்துச் சென்று மன்னிப்பு கேட்க வைக்கின்றனர்.
இந்த சம்பவத்தை பார்த்த முத்துவும் மீனாவும் அவர்களை கடுமையாக எச்சரிக்கின்றனர். இனிமேல் இப்படி நடக்கக் கூடாது, இதில் தலையிட வேண்டாம் என சத்யாவுக்கு தெளிவாக அறிவுறுத்துகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மனோஜின் ஷோரூமுக்கு சென்ற ரோகிணி, தன்னை முத்துவும் மீனாவும் அடித்ததாக மனோஜை கட்டிப்பிடித்து அழுகிறார். ஆனால் மனோஜ் மனம் இறங்கவில்லை. “எல்லா உண்மையும் எனக்கு தெரியும். முத்து எப்படியிருந்தாலும் அவன் என் தம்பி. அவனுக்கு நீ செய்த துரோகம் எல்லாருக்கும் தெரியும்” என்று கூறி ரோகிணியை திட்டி அனுப்புகிறார்.
மற்றொரு பக்கம், நீத்துவின் ரெஸ்டாரண்டில் அதிகமான கஸ்டமர்கள் வர ஆரம்பிக்கிறார்கள். ரவி புதிய வகை பரோட்டாவை வைத்து ஒரு ஸ்பெஷல் ரெசிபி தயாரிக்கிறார். அங்கு வந்த யூடியூப் பிரபலங்கள், ரவி மற்றும் நீத்துவை ஒன்றாக நிற்கச் சொல்லி புகைப்படம் எடுக்கின்றனர். அந்த நேரத்தில் நீத்து, ரவியின் கைகளை பிடித்து மிக நெருக்கமாக நிற்கிறார்.
இறுதியில், மனோஜ் ஷோரூமில் நடந்த விஷயத்தை வீட்டிற்கு வந்து சொல்கிறார். அப்போது முத்துவும் மீனாவும் வீட்டிற்கு வர, அண்ணாமலை அவர்களை கடுமையாக திட்டுகிறார். ஆனால் இதை நாங்கள் செய்யவில்லை, மீனாவின் நண்பர்கள் தான் செய்தார்கள் என விளக்கம் அளிக்கின்றனர். அதற்கு விஜயா, “என்னிடம் சொல்லியிருந்தால் நானும் வந்து அவளுக்கு அடித்திருப்பேன்” என்று கோபமாக கூறுகிறார்.
Listen News!