• Feb 23 2025

விக்ரம் அடுத்த படத்தில் 3 வில்லன்கள்.. ஒருவர் எஸ்.ஜே.சூர்யா.. இன்னும் 2 பேர் யார் யார்? இன்னொரு மல்டிஸ்டார் படமா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் நடிப்பில் , பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாத நிலையில் விக்ரம் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டதாக தெரிகிறது. தங்கலான் திரைப்படம் அனேகமாக தேர்தலுக்கு பின்னர் தான் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 'சித்தா' இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த தயாராகிவிட்டார். 


இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் இம்மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் ஏற்கனவே எஸ்ஜே சூர்யா இணைந்தார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று தெரிகிறது.


ஆனால் அதே நேரத்தில் இந்த படம் குறித்து நாம் விசாரித்த போது இந்த படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும், இது ஒரு மல்டி ஸ்டார் படம் என்று தெரிகிறது.  ஒரு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னொரு வில்லனாக நடிக்க பகத் பாசில்  நடிக்க இருப்பதாகவும்,  மூன்றாவது வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 


விஜய் சேதுபதி இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தாலும் அருண்குமார் அவருடைய நெருங்கிய நண்பர் என்பதால் இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொள்ளலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே அருண்குமார் இயக்கத்தில் உருவான 'பண்ணையாரும் பத்மினியும்' 'சேதுபதி' 'சிந்துபாத்' ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளதால் அவருடைய கோரிக்கையை ஏற்று விஜய் சேதுபதி இந்த படத்தில் சில காட்சிகள் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆக மொத்தம் விக்ரம் ஹீரோவாகவும், எஸ்ஜே சூர்யா, பகத் பாசில்  மற்றும் விஜய் சேதுபதி வில்லன்களாகவும் நடிக்க இருக்கும் நிலையில் இது ஒரு மல்டி ஸ்டார் படம் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. 


மேலும் இந்த படத்தின் நாயகியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் மொத்தத்தில் இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாக்க இயக்குனர் அருண்குமார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விக்ரம் படங்களிலே இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement