• Jan 18 2025

கண்ணீர் விட்டு கட்டியணைத்து அழுத அருண் விஜய் குடும்பம்..!காரணம் இது தான்

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

ஆரம்பத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த வணங்கான் படம், சில சூழ்நிலைகளின் காரணமாக அவரால் கைவிடப்பட்டது. அதன் பின்னர், இப்படத்தை அருண் விஜய்ஏற்றுக்கொண்டு சிறப்பாக முடித்துள்ளார். சினிமா ரசிகர்களிடையே இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


சமீபத்தில் வணங்கான் படத்தை அருண் விஜயின் குடும்பத்தினர் முன்னிட்டு ஸ்பெஷல் ஸ்கிரீனிங் நடத்தப்பட்டது. படத்தை பார்த்து அனைவரும் மிகவும் நெகிழ்ச்சியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அருண் விஜயின் தாயார், தந்தை மற்றும் மனைவி ஆகியோர் படம் முடிந்தவுடன் அவர் மீது பெருமிதத்துடன் கண்ணீருடன் கட்டித் தழுவி பாராட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.


இதை தொடர்ந்து, படக்குழுவும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பட வெளியீட்டை திட்டமிட்டுள்ளதாக  தமிழ் சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.


இந்தப் படம் அருண் விஜய்க்கு ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது பொங்கல் பண்டிகையில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக இருக்கும் என படக்குழு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement