• Jan 19 2025

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய விஜய்- பேருந்தின் மீது பூக்களை அள்ளி வீசிய ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படம் கலவையான விமர்சங்ளைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது. இதனை அடுத்து விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தி கோட் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பும் மிகவும் விறுவிறுப்பாக சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் தளபதியைக் காணபதற்காக ரசிகர்கள் அந்த இடத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.தன்னை காண வரும் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக தொடர்ந்து நடிகர் விஜய் கேரவன் மீது ஏறி ரசிகர்களை கண்டு வணக்கம் தெரிவித்தும், கையசைத்தும், ரஞ்சிதமே கிஸ் கொடுத்தும் வருகிறார்.

நேற்று வெள்ளை சட்டையில் ஆள் அடையாளமே தெரியாமல் விஜய் வந்த நிலையில், இன்று கலர் கலர்  சட்டையை அணிந்துக்கொண்டு விஜய் அதே போல கேரவன் மீது ஏறி ரசிகர்களுக்கு போஸ் கொடுத்து உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

சென்னையில் முழுக்க செட் போட்டு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் மகன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் காட்சிகள் தான் எடுக்கப்பட்டு வருவது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.ஓடிடி உரிமம் இந்த படத்திற்கு அதிக தொகைக்கு விற்கப்பட உள்ளதாகவும், நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement