• Jan 18 2025

அது தனிப்பட்ட நபரின் விருப்பம்! விவாகரத்து குறித்து சினேகா-பிரசன்னா ட்ரெண்டிங் கருத்து...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை சினேகா முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து வந்தவர். புன்னகை அரசியாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் முக்கிய பிரபலம். இவர் தற்போது ஒரு சில படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


கடைசியாக இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் சினேகா நடித்ததை பார்த்து மக்கள் பாராட்டி வந்தனர்.  அதன்பின் சினேகா எந்த படமும் கமிட்டாகவில்லை. 


தற்போது தனது சினேகாலயா புடவை கடையை பிரபலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நட்சத்திர தம்பதியான சினேகா மற்றும் பிரசன்னா ஆகியோர் தங்களது ஆடை கடையின் ஆடைகளை கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு அணியக் கொடுத்து ஒய்யார நடை என்னும் ரேம்ப் வாக் விழாவினை நடத்தியுள்ளனர்.


அதில் பிரபலங்கள் விவாகரத்து குறித்து கேள்வி கேட்கபட்டது. திரைத்துறையில் விவாகரத்து நடப்பதைத் தடுக்க அறிவுரை எல்லாம் சொல்ல முடியாதுங்க, எல்லோருக்கும் அவங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. அதை நாம் மதிக்கணும் என்று சிம்பலாக கூறியுள்ளார். சினேகாவும் பிரசன்னாவை மணந்து இன்றுவரையில் கிவுட் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement