• May 13 2024

நடிகை பூமிகாவா இது, 44 வயதில் நீச்சல் குளத்தில் அவர் எடுத்த போட்டோ ஷூட்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

பூமிகா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். 2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 

மேலும் தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் குஷி. இது அவருக்குச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது.


அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் இந்தி திரைப்படம் 2003 இல் வெளியான தேரே நாம் ஆகும்.


தமிழில் அறிமுகமான திரைப்படம் பத்ரி ஆகும். தொடர்ந்து, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


2018ம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான U Turn படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். கண்ணை நம்பாதே என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் புதிய படங்கள் நடித்துள்ளார்.


நடிகை பூமிகா எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கக் கூடிய ஒரு பிரபலம். அண்மையில் நீச்சல் குளத்தில் விதவிதமான புகைப்படங்கள் எடுத்து அவர் பதிவிட அப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம போட்டோ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement