• Mar 29 2024

பிரமாண்டமாக வெளியாகிய அவதார் 2 திரைப்படத்தின் திரைவிமர்சனம்- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!


ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர், உலகம் முழுதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது.இப்படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றுள்ளதா என்று வாங்க பார்க்கலாம்.

பண்டோரா எனும் கிரகத்தில் நாவி இனம் வாழ்ந்து வருகிறது. இந்த கிரத்தில் காலடி எடுத்து வைக்கும் கதாநாயகன் ’ஜேக் சுள்ளி'  நாவிகளை அவர்களுடைய இடத்தில் இருந்து விரட்ட, நாவிகளாக உருமாறி அவர்களுடைய வாழ்வியலை கற்றுக்கொள்ளும் ஜேக், பயிற்சியின் சமயத்தில் கதாநாயகி ’நெய்டிரி’ மீதி காதல் கொண்டு நாவிகளின் தலைவனாக மாறிவிட்டார் என்பதை முதலாம் பாகத்தில் பார்த்திருப்போம்.


அதன்படி இரண்டாம் பாகத்தில் நாவி இனத்தின் தலைவனாகவும், நான்கு பிள்ளைகளின் அப்பாவாகவும் தனது மனைவி நெய்டிரியுடன் சேர்ந்து சந்தோஷமாக பண்டோராவில் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் ஜேக். இந்த சமயத்தில் மீண்டும் பண்டோராவில் மனிதர்களின் கால்த்தடம் படுகிறது.இந்த முறை பண்டோராவில் புதிய உலகத்தை உருவாக்க வேண்டும் என்று ராணுவம் மிகப்பெரிய படையுடன் புறப்பட்டு வந்துள்ளது. இவர்களுக்கு உதவ Colonel Quaritch வருகிறார். முதல் பாகத்தில் மனிதானாக இறந்துபோன Colonel Quaritch தனது நினைவுகளை சிப் மூலம் ஸ்டோர் செய்து நாவி உடையில் புகுந்து மீண்டும் கதாநாயகன் ஜேக்கை பழிவாங்க வருகிறார்.

Colonel Quaritch தனது வீரர்களுடன் பண்டோரா காட்டுக்குள் வரும் பொழுது ஜேக்கின் மகன் மற்றும் இரு மகள்களுடன் இணைந்து Colonel Quaritchன் மகன் மைல்ஸ், Colonel Quaritchயின் வீரர்களிடம் சிக்கிக்கொள்கிறார்கள். ஆனால், கதாநாயகன் ஜேக் தனது மகன் மற்றும் இரு மகள்களை போராடி காப்பாற்றி விடுகிறார். ஆனால், மைல்ஸ் Colonel Quaritchயிடம் கைதியாக மாட்டிக்கொண்டார்.


இதன்பின் பண்டோராவில் இருந்தால் தனது மனைவி, மகன்கள், மகள்களை இழந்துவிடுவேன் என்று என்னும் ஜேக் தனது அரச பட்டத்தை வேறொருவருக்கு கொடுத்துவிட்டு, பண்டோராவில் இருந்து வெளியேறி, கடல் வாசி நாவிகளிடம் தஞ்சம் கேட்டு செல்கிறார். கடல் நாவிகளின் அரசர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க சம்மதிக்க, அங்கு கடல் சார்ந்த விஷயங்களை கேட்கும் அவரது குடும்பமும் சற்று கஷ்டப்பட்டு கற்றுக்கொள்கிறார்கள்.

இப்படி நாட்கள் செல்லும் சமயத்தில் வில்லன் Colonel Quaritch இவர்கள் இருக்கும் இடத்தை தேடி அலைய துவங்குகிறான். இந்த தேடலில் வில்லன் Colonel Quaritchயிடம் ஜேக் குடும்பத்தின் சிலர் சிக்கி கொள்கிறார்கள். வில்லனை எதிர்த்து போராடாமல் தஞ்சம் கேட்டு சென்ற ஜேக் இறுதியில் தைரியத்துடன் தனது குடும்பத்தை காப்பற்றினாரா? இல்லையா?  என்பதே படத்தின் மீதி கதை.. 

படம் குறித்த அலசல்

 அவதார் படத்தின் முதல் பாகத்தை போலவே இப்படத்தினை சூப்பராக இயக்கியுள்ளார்.அதே போல கதாநாயகன், கதாநாயகி இருவருமே நாம் முதல் பாகத்தில் பார்த்ததை விட அசத்தலாக காட்சியளிக்கிறார்கள்.


எந்திரங்களை பயன்படுத்திய விதம், 3டி கிராஃபிக்ஸ், எமோஷனல் கதைக்களம் என தனது இயக்கத்தின் மூலம் மிரட்டுகிறார் ஜேம்ஸ் கேமரூன். இத்தனை நிறைகள் படத்தில் இருந்தாலும் குறையாக படத்தின் நீளம் அமைந்துள்ளது. சற்று படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

அது இன்னும் படத்தை விறுவிறுப்பாக்கி இருக்கும் என்று படத்தை பார்ப்பவர்களை நினைக்க வைத்துள்ளது. முதல் பாகத்தின் எப்படி அனைவரையும் காடு வியப்பில் ஆழ்த்தியதோ, அதே போல் இந்த இரண்டாம் பக்கத்தில் கடலுடைய நீர் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.


முக்கியமாக இப்படத்தின் திரைக்கதை எழுதிய ஜேம்ஸ் கேமரூன், ரிக் ஜெஃபா, அமண்டா சில்வர் அனைவருக்கும் தனி பாராட்டு. சில இடங்களில் சலிப்பு தட்டினாலும், விஷுவல் மூலம் நம்மை வியக்க வைத்த VFX மற்றும் அனிமேஷன் குழுவிற்கு நன்றி. 

மொத்தத்தில் காலத்தை கடந்து பேசக்கூடிய, பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம் தான் ’அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ அமைந்துள்ளது எனலாம். 

Advertisement

Advertisement

Advertisement