• May 18 2024

ரஜினியை காட்டி தான் எனக்கு சோறு ஊட்டினாங்க.. அந்தக் கதையை குத்திக் காட்டுகிறாரா லோகேஷ்?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இயக்குர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் தற்கால இளைஞர்களை கவரும் வகையில் அடிதடி கலவரமாக காணப்பட்டாலும், மக்கள் விரும்பி பார்க்கும் வகையில் படங்களை கொடுத்துள்ளார்.

அந்த வகையில் கார்த்திக்கை வைத்து கைதி திரைப்படம், நடிகர் விஜய்யை வைத்து லியோ திரைப்படம், விக்ரம் படத்தில் கமல், சூர்யாவுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பு கேரக்டரையும் கொடுத்து இருந்தார்.


இதை அடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171வது படத்தை இயக்க தயாராக உள்ளார். இந்த படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தனது twitter பக்கத்தில் அதிகார்வ பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கமல் சார் ரசிகனாக முன்பே ரஜினி சார் படங்களை காட்டித்தான் எனக்கு சாப்பாடு ஊட்டினாங்க என்று லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், அண்ணாத்தே படம் வரைக்கும் ஒரு படத்தோட FDFSவையும் பார்க்காமல் இருந்தது இல்லை. என்னுடைய பார்வையில் ரஜினி சாரை ஒன்னு நினைச்சிட்டு இருக்கன். அதை நான் காட்டப் போகிறேன். கமல் சாரின்  ரசிகனாக முன்பே ரஜினி சாரின் படங்களை காட்டி தான் எனக்கு சோறு ஊட்டினாங்க என்று கூறியுள்ளார்.

இதேவேளை, ரஜினி ஏற்கனவே காக்கா, கழுகு பிரச்சினையில் சிக்கி இருக்க, லோகேஷ் இவ்வாறு கூறியதும் மறைமுகமாக குதிக் காட்டுகிறாரா என ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement