• Jul 27 2024

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஜப்பானிலும் ரீரிலீஸ் கொண்டாட்டம்.. பான் - வேர்ல்ட் நடிகரான விஜய்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பின்னர் சமீபத்தில் ரீரிலீஸ் ஆன நிலையில் இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்து வருவதாகவும் புதிய திரைப்படங்களின் வசூலை விட ’கில்லி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

’கில்லி’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் முதல் நாள் ரூ.7 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அதற்கு அடுத்த சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் 10 கோடிக்கு மேல் வசூல் ஆகி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் ஒரு பக்கம் தமிழகத்தில் ’கில்லி’ படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ஜப்பான் நாட்டில் விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அங்குள்ள ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடி வரும் காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ரஜினிக்கு மட்டுமே ரசிகர்கள் இருந்தனர் என்பதும் ரஜினியின் படங்கள் மட்டுமே அங்கு கொண்டாடப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது ஜப்பான் நாட்டில் விஜய் படங்களும் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்து வருகின்ற நிலையில் தற்போது விஜய் படங்கள் ஜப்பான் நாட்டில் ரீரிலீஸ் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் விஜய் பிறந்த நாளான ஜூன் 23ஆம் தேதி விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ’சர்கார்’ திரைப்படம் தமிழகத்தில் வெளியாக இருப்பதாகவும் அதே நாளில் ஜப்பான் நாட்டில் அந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ள வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement