• May 05 2024

படம் பார்க்காமலேயே குறை கூறுகின்றார்கள்- கடும் சோகத்தில் கே.ஜி.எஃப் 2 திரைப்பட வில்லன் ஆதிரா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவையை திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் தான் கே.ஜி.எஃப். இப்படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்தே இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. அந்த வகையில் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இப்படத்தில் அதீரா என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் சஞ்சய் தத். இப்படத்தின் மூலம் இவருக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டனர்.மேலும் கரண் மல்கோத்ரா இயக்கத்தில், ரன்பீர் கபூர், வாணி கபூர், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் 'ஷம்ஷேரா'.

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியானது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரன்பீர் கபூரின் படம் திரையரங்கில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு போதிய வரவேற்பைப் படம் பெறவில்லை, மாறாகக் கலவையான விமர்சனங்களையே பெற்றது இதனைத்தொடர்ந்து இப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர். இதைப்பார்த்து கடுப்பான படத்தின் இயக்குநர் கரண் மல்கோத்ரா ஷம்ஷேரா படத்திடம் பேசுவதுபோல ஒரு பதிவினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஷம்ஷேரா, " நீ எப்போதும் இருப்பது போல கம்பீரமானவன். இந்தத் தளத்தில் உன் மீது அன்பு, வெறுப்பு, இழிவு காட்டப்படுகிறது. இந்த வெறுப்பைக் கையாள முடியாமல் நான் அமைதி காத்ததற்காக உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய அந்தப் பலனவீத்திற்கு மன்னிப்பே கிடையாது. இப்போது நான் உன்னுடன் இருக்கிறேன். நீ நான் இயக்கிய படம் என்பதில் பெருமை கொள்கிறேன். இனி எல்லாவற்றையும் சேர்ந்தே எதிர்கொள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவரை தொடர்ந்து நடிகர் சஞ்சய் தத், கடினமான உழைப்பை கொட்டி இந்த படத்தை திரைக்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால் நிறைய பேர் குறை கூறுகிறார்கள். அதிலும் பலர் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பை வெளிப்படுத்துவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement