• May 05 2024

செக்ஸி தமிழ் ப்ரெண்ட் என்ற கேப்ஷனில் வெளியான தி க்ரே மேன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தற்பொழுது கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என தனது நடிப்பை விரிவுப்படுத்தி தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகின்றார்.தன்னை தமிழ் நடிகர் என்று சொல்லாமல் இந்திய நடிகர் என்று அடையாளப்படுத்தும்படி அவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இவரது நடிப்பில் கடந்த 22ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகிய திரைப்படம் தான் தி க்ரே மேன் படம். அவெஞ்சர்ஸ் என்ற சிறப்பான படத்தை கொடுத்திருந்த ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது.

இதன் ப்ரமோஷன்களுக்காக அடுத்தடுத்து அமெரிக்கா, மும்பை என தன்னை பிசியாக வைத்துக் கொண்டார் தனுஷ்.அமெரிக்காவில் நடைபெற்ற ப்ரமோஷன்களில் தன்னுடைய மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சென்றிருந்தார்.

இந்தப் படத்தில் சிறிய கேரக்டரில்தான் தனுஷ் நடித்துள்ளார். ஆனால் அவரது கேரக்டர் மிகவும் மிரட்டலாக அமைந்துள்ளது. அவருக்கு சிறப்பான விமர்சனங்களையும் பெற்றுத் தந்துள்ளது.தற்போது இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

https://twitter.com/NetflixIndia/status/1552264034866630661

இதில் படத்தின் சூட்டிங் நிறைவையொட்டி தனுஷிற்கு பூங்கொத்து அளிக்கப்படுகிறது. தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள சண்டைக் காட்சியின் மேக்கிங்கும் இந்த வீடியோவில் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

தொகுப்பாளினி பாவனாவுக்கு கிடைத்த விஷேட சலுகை-சூப்பரான விஷயமாச்சே- குவியும் வாழ்த்துக்கள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement