• May 18 2024

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தில் இருந்து கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரின்ஸ். இப்படத்தில் இவருடன் பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தினை தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கி வருகின்றார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவரும் நடிக்கின்றார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் முதல் லுக் மற்றும் தலைப்பு நேற்று வெளியாகி கவனம் பெற்றது. அதையடுத்து இன்று இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த காட்சிகள் படமாக்கப்பட்டதும் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடியும் என்றும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement