• May 18 2024

முக்கிய பட ஷூட்டிங்கில் அஜித்திற்கு ஏற்பட்ட காயம்-பிரபல இயக்குநர் பகிர்ந்த விடயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் அஜித்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடத்தே நல்ல வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றது.

இவ்வாறு இருக்கையில் தற்போது அஜித் மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.மேலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

சமீபத்தில் கூட திருச்சிக்கு துப்பாக்கி சூடுதல் போட்டிக்காக வந்த அஜித்தை காண பெரிய ரசிகர்கள் கூட்டமே திரண்டது. அப்போது அஜித் ரசிகர்களுக்காக மாடியில் இருந்து கையசைத்து காட்டிய வீடியோ எல்லாம் இணையத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில் நடிகர் அஜித் குறித்த எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயமாக இருந்தாலும் அது ரசிகர்களிடையே பரவி வருவது வழக்கம். அதன்படி அஜித் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வரலாறு.

மேலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித் ஏகிரி பின்னால் விழுவது போன்ற காட்சிக்காக உண்மையாகவே அஜித் அப்படி செய்துள்ளார். அப்படி அவர் பின்னால் விழும்போது அவரின் மண்டை கீழே இடித்துள்ளது.

அவர் விழுந்ததும் எழுந்திருக்காமல் அப்படியே படுத்துவிட்டராம், இதோ ஆகிவிட்டதென அஜித் அவரின் மருத்துவரிடம் படுத்த நிலையிலே ஆலோசனை கேட்டுள்ளார். 10 நிமிடம் Icebag-யை தன் கழுத்தில் வைத்து அதன்பிறகு அவர் தான் எழுந்து கொண்டாராம்.

இதனை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் அளித்துள்ள பேட்டியில் அஜித் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement