• Apr 28 2024

ரிலாக்ஸ் டைம்ல சிவகார்த்திகேயன் விரும்பிப் பார்க்கும் மூன்று படங்கள் இவை தானாம்- வெளியாகிய முழு விபரம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு-தமிழ் என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரின்ஸ். இப்படத்தினை இயக்குநர் அனுதீப் குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகஉக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார். நடிகர்கள் சத்யராஜ் & பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

ப்ரின்ஸ் படம்  வரும் தீபாவளியை முன்னிட்டு நாளை அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி நடிகர் சிவகார்த்திகேயன், டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். 

அப்போது ஒரு ரசிகர், "ரிலாக்ஸ் ஆகணும்னா நீங்க உடனே பாக்க நினைக்கற ஆல் டைம் ஃபேவரைட் படம் எது? - அல்லது - காட்சிகள் எது?" என கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், "உள்ளத்தை அள்ளித்தா, சிவாஜி, வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என  பதில் அளித்துள்ளார்.


இயக்குநர் சுந்தர் சி இயக்கிய 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படம், நடிகர் கார்த்தி, கவுண்டமணி, ரம்பா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் ஆகும். சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & இயக்குநர் ஷங்கர் முதல்முறையாக இணைந்து பணிபுரிந்த திரைப்படம் ஆகும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement