தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவூட் ஹாட் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் இருவரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸாக இருந்தது. தற்போது அந்த வாய்ப்பு நீங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரஜினி ரசிகர்களிடையே பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாக மாறியுள்ளது.
'கூலி' படம் ரஜினிகாந்தின் எதிர்பார்ப்பு மிகுந்த திரைப்படமாக காணப்பட்டதுடன் அதனை ஆகஸ்ட் 14ம் திகதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்திருந்தது. அதே நாளில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான 'வார் 2' திரைப்படமும் வெளியாக இருந்தது.
'வார் 2' என்பது பாலிவூட் உலகின் மிக முக்கியமான ஆக்சன் படமாக காணப்படுகின்றது. 2019ல் வெளியான 'வார்' திரைப்படம் இந்தியளவில் மாபெரும் வசூலைப் பெற்று பெரும் சாதனைகளை ஏற்படுத்தியது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக உருவாகி வரும் 'வார் 2' திரைப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் பல முன்னணி நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் பாலிவூட் மட்டுமல்லாமல் தென்னிந்திய ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நாளில் ரிலீஸானால் ‘கூலி’க்கு நேரடி போட்டியாக 'வார் 2' இருந்திருக்கும் என்று சிலர் கருத்துத் தெரிவித்த நிலையில் தற்பொழுது வார்2 ஹீரோ ஹிருத்திக் ரோஷனுக்கு அடிபட்டதால் படத்தினை தாமதமாக ரிலீஸ் செய்வதற்கு படக்குழு முடிவெடுத்துள்ளது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் உள்ளனர். ஏனெனில், கூலி திரைப்படம் ரிலீஸாகும் திகதியில் எந்த பெரிய போட்டியும் இல்லாமல் அமைதியாக படம் ரிலீஸாக உள்ளதால் ரசிகர்கள் சந்தோசத்தில் உள்ளனர்.
Listen News!