• May 19 2024

நிகழவிருக்கும் விஜய் காவேரியின் திருமணம்... எதிர்பாராத விதமாக அங்கே வரும் பசுபதி... தடைபடுமா இவர்களின் திருமணம்... விறுவிறுப்பாக வெளியான ப்ரோமோ...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி. இந்த சீரியல் ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு.


ஏற்கனவே நர்மதா ஆப்ரேஷனுக்காக பண தேவை வந்தபோது விஜய்யை திருமணம் செய்வதாக கூறி பணம் வாங்கிய காவேரி பெரிய சிக்கலில் மாட்டி கொள்கிறாள். இப்போது அவர்களின் திருமணம் நடந்தே ஆகவேண்டும் என்று விஜய் கடுமையாக எச்சரித்த நிலையில் காவேரி மற்றும் விஜயின் திருமணம் நிகழ இருக்கிறது.


ஒரு கோவிலில் மணமகன் அலங்காரத்தில் விஜய் தனது நண்பர்களுடன் காத்துக்கொண்டிருக்கிறார். அப்போது தோழிகளால் அலங்காரம் செய்யப்பட்டு விருப்பம் இல்லாமல் காவிரி மணமகள் அலங்காரத்தில் கோவிலுக்கு வருகிறாள். அங்கு வந்தும் தனது பழைய காதல் ஞாபகங்களை மீட்டி பார்த்து கவலை படுகிறாள்.


கோவில் பூசகர் இருவரும் மாலை மாற்றி கொள்ளுங்கள் என்று சொல்லும் போது அங்கே எதிர்ப்பாராத விதமாக பசுபதி வந்து விடுகிறார். திருமணம் செய்ய ரெடியாக இருக்கும் இருவரையும் பார்த்து விட்டு ஏதோ திட்டம் யோசிப்பது போல ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது. நிகழ இருக்கும் காவேரி ,விஜயின் திருமணம் நடைபெறுமா? அல்லது பசுபதியால் தடைபடுமா ? என்று சீரியல் பார்த்து தெரிந்து கொள்ளவோம்.   


Advertisement

Advertisement