• May 18 2024

விஜய் என்று கூப்பிட சொன்னாரு, அவருடைய நிக்நேம் இது தான்- லியோ பட த்ரிஷாவின் ரீல் மகள் அளித்த பேட்டி

stella / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் முன்னணி நட்சத்திரங்களான விஜய்,த்ரிஷா, அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி என பலர் நடித்துள்ளனர்.

லியோ படம் தற்போதுவரை ரூ. 70 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகள் முன்பதிவு நடந்துள்ளதாக , இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் படத்தின் முன்பதிவு குறித்த விபரங்களை வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அறிவித்துள்ளார். 


லியோ ஏற்கனவே முதல் நாள் ரூ 34 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் சுமார் 18 கோடி ரூபாய் அட்வான்ஸ் வியாபாரம் செய்ததாக சாக்னில்க் தெரிவித்துள்ளது.

மேலும் படத்தைப் பார்த்த உதயநிதி லியோ திரைப்படம் எல்சியூ என்று தெரிவித்திருந்ததால் ரசிகர்கள் எல்லோரும் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.இந்த நிலையில் இப்படத்தில் விஜய்யின் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்த பொண்ணு பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் விஜய் அங்கிள் என்று தான் முதலில் கூப்பிடுவேன்.


ஆனால் அவர் என்னை விஜய் அங்கிள் என்று கூப்பிடாத, விஜய் என்று தான் கூப்பிட சொன்னாரு, அப்பிடி தான் நானும் கூப்பிடுவேன். அதே போல Vijay-அ Cheetah-னு கூப்பிடுவேன்" இது அவருடைய நிக்நேம் என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement