• Oct 08 2024

அந்தகன் படத்திற்கு தடபுடலாக நடக்கும் ப்ரோமோஷன் பணிகள்! சிம்ரன் வெளியிட்ட வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான அந்தாதூன் திரைப்படம் சுமார் 100 கோடிக்கும் அதிகமான வசூலில் சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றிருந்தார்.

தமிழ் ரீமேக்கில் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்டிக் இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது சில காரணங்களால் விலக, தியாகராஜனே  இப்படத்தை இயக்கினார்.

தமிழில் அந்தகன் என பெயரிடப்பட்ட இந்த படத்தில் நடிகர் பிரசாந்துடன் சிம்ரன் மீண்டும்  இணைந்துள்ளதோடு இவர்களுடன் பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, ஜோகி பாபு, கே.எஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார் போன்ற பலர்  நடித்துள்ளார்கள்.

இந்த படம் சில ஆண்டுகளாகவே பல பிரச்சினைகளால் வவெளியாகாமல் இருந்த நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


எனினும் இதைத்தொடர்ந்து இந்த படம் எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என புதிய அறிவிப்பை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் அந்தகன் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் பல இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டா பக்கத்தில்  தற்போது அந்தகன் பட ப்ரோமோஷன் கோயம்புத்தூரில் நடைபெறுவதாகவும் இது முடிய சென்னைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என தமது பிரார்த்தனையையும் முன்வைத்து வருகின்றார்கள்.

Advertisement