‘அனுமான்’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமா மட்டுமல்லாது இந்திய ரசிகர்கள் மத்தியில் தனி அடையாளம் பெற்ற நடிகர் தேஜா சஜ்ஜா, தற்போது பான் இந்தியா ஹீரோவாக வளர்ந்துள்ளார். சிறுவயதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடித்ததிலிருந்து தொடங்கிய அவரது பயணம், ‘அனுமான்’ வெற்றிக்குப் பின் மிகப்பெரிய உயரத்தைத் தொட்டது.
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவான ‘அனுமான்’ திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூலித்து, இந்திய சினிமாவில் சிறந்த சூப்பர் ஹீரோ படமாக அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து, தேஜா நடித்துள்ள புதிய படம் ‘மிராய்’ தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக் கட்டம்னேனி இயக்கியுள்ள இந்த படத்தில் மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று வெளியான ட்ரைலர், சரித்திர பின்னணியில் உருவான மாஸ் ஆக்ஷன், அதிரடி காட்சிகள், தரமான கிராபிக்ஸ் மற்றும் ராமனைக் மையமாகக் கொண்டு நகரும் கதையம்சம் ஆகியவற்றால் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
‘மிராய்’ திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி பான் இந்தியா ரிலீசாகும் நிலையில், இதுவும் ‘அனுமான்’ போல 500 கோடிக்கு மேல் வசூலிக்குமா? இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Listen News!