• Nov 08 2025

நாடு நல்லா இருக்க அரசியல் தேவையில்லை – நடிகர்களின் அரசியல் வருகை பற்றி அஜித் கருத்து!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் உறுதியான இடத்தைப் பிடித்தவர் நடிகர் அஜித் குமார். படங்கள், ரேஷிங் , கேரியர் என எதிலும் தவறான விளம்பரங்களை விரும்பாத இவர், தன்னுடைய தனிமையான அணுகுமுறையால் திரையுலகில் தனித்துவமான நட்சத்திரமாக உள்ளார். பேட்டிகள், ஊடக சந்திப்புகள், சமூக வலைதளப்பக்கம் என அனைத்திலும் நாட்டம் இல்லாத இவர், கடந்த சில வருடங்களாக ஊடகங்களில் இருந்து முழுமையாக விலகி இருக்கிறார்.


ஆனால், இப்போது சமூக வலைத்தளங்களில் அவரது பழைய பேட்டி ஒன்று மீண்டும் வைரலாகி, அரசியல் விவாதங்களுக்கு நடுவே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

இப்போதைய அரசியல் சூழ்நிலையைப் பார்த்தால், தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு நகரும் பிரபலங்கள் பற்றிய விவாதம் பலமாகவே உள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் அவர்கள் தனது அரசியல் கட்சியான த.வெ.க மூலம் அரசியலில் களமிறங்கியுள்ளார்.

இதே நேரத்தில், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அஜித் குமார் அவர்களது பழைய பேட்டி ஒன்று ரசிகர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அந்த பேட்டியில் அஜித், "நாடு நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக அரசியலில் நுழைவது அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் தாங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து தங்கள் கடமையை ஒழுங்கா செய்தாலே நாடு நன்றாக இருக்கும்." என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement