• Oct 02 2025

துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள்.. போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த "காந்தா" படக்குழு.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் என அழைக்கப்படும் துல்கர் சல்மான் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். மலையாள சினிமாவில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் தனது நடிப்பால் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கும் துல்கர் சல்மானுக்கு இன்று (ஜூலை 28, 2025) பிறந்த நாள்.


அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் #HBDdulquersalmaan என்ற ஹாஷ்டாக் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில், அதிகமான திரையுலக பிரபலங்களும், இயக்குநர்களும் தங்களுடைய வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் தற்போது நடித்து வரும் திரைப்படமான ‘காந்தா’ படக்குழு அவருக்காக சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


போஸ்டரில் துல்கரை ஒரு அதிரடி தோற்றத்துடன் காட்சிப்படுத்தியிருப்பது, ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் அவரது தமிழ் திரையுலக பிரவேசத்தில் புதிய திசையைக் காட்டும் என்று கூறப்படுகிறது. படக்குழுவின் அறிவிப்பின் படி, ‘காந்தா’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ டீசர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது.

இது துல்கரின் பிறந்தநாளை சிறப்பிப்பதற்கான மிகப்பெரிய பரிசாகவும் பார்க்கப்படுகிறது. டீசர் இன்று வெளியாவதைத் தொடர்ந்து, படத்தின் பரபரப்பான அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement