தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூரி. இவர் விடுதலை படத்தின் ஊடாக நாயகனாக களம் இறங்கி இருந்தார். அதை தொடர்ந்து ஒவ்வொரு பட கதைகளையும் மிக அவதானமாக தேர்ந்தெடுத்து அதுக்கேற்ற வகைகள் நடித்து வெற்றி படங்களை கொடுத்து வருகின்றார்.
அந்த வகையில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை, கருடன், கொட்டுக்காளி ஆகியவை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. அதிலும் கொட்டுக்காளி திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்று குவித்திருந்தது.
இந்த நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் விருது வென்ற பிறகு இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் தமிழில் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது 2022 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் தான் பி.எஸ் வினோத் ராஜ். இவரின் அடுத்த படைப்பாக வெளியிடப்பட்ட திரைப்படம் தான் கொட்டுக்காளி. இந்த படத்தை சிவகார்த்திகேயன் எஸ் கே ப்ரோடுக்ஷன் தயாரிப்பில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகி இருந்தது.
இதன்போது கொட்டுக்காளி படத்திற்கு விருதை பெற்ற பின் மேடையில் பேசிய இயக்குனர் தனது தாய் மொழியில் பேச விரும்புவுதாக தெரிவித்து இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், இந்த விருது முக்கியமான தருணத்தில் எனக்கு கிடைத்துள்ளது. இதை நான் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், துணை தயாரிப்பாளர் கலை, நடிகர் சூரி, அனாபெண், ப்ரொடக்ஷன் டிபார்ட்மென்ட், மேலும் எப்போதும் என்னை விட்டு விலகாத என்னுடைய டீம், படத்தின் பக்க பலமாக இருந்த அனைவருக்கும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கின்றேன் என்று தெரிவித்து நன்றியையும் கூறியுள்ளார்.
தற்பொழுது சர்வதேச அரங்கில் தமிழ் பேசிய இயக்குனர் பி. எஸ் வினோத் ராஜின் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
.@PsVinothraj WINS AGAIN ❤️🤗 #Kottukkaali Won Grand Prix Award at Amur Autumn International Film Festival 🔥 pic.twitter.com/tC1obTX1an
Listen News!