• Apr 17 2026

புத்தாண்டில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி வெறியர்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ரஜனிகாந்த் என்ற பெயருக்கு ஒரு கெத்து உண்டு, பவர் இருக்கு, ஸ்டைல் இருக்கு. இப்படி பெயருக்கான பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வயதிலும் யாருமே எதிர்ப்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுக்கிறார், வசூல் நாயகனாக டாப்பில் உள்ளார்.

இந்த நிலையில், தனது வீட்டின் முன் கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்களை காண வந்த ரஜினிகாந்த் கதவின் அருகே நின்ற படி கையசைத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இவ்வாறு, தனது வீட்டின் கதவு மேல் நின்று வெள்ளை குர்த்தாவுடன் காட்சியளித்த ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் தலைவா தலைவா என கத்தி உற்சாகமடைந்தனர். 

இதை தொடர்ந்து ரஜினிகாந்த் வீட்டின் வாசலிலேயே நின்ற ரசிகர்கள் கேக் வெட்டி புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.


Advertisement

Advertisement