• Feb 26 2024

லியோ படத்திலிருந்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- அனிரூத்துடன் இணைந்ததால் தான் இத்தனை கோடி பெறுமதியா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய், 'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பின்னர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'லியோ'. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' மற்றும் 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களுமே, வசூல் ரீதியாக சுமாரான்ன கலெக்ஷனை பெற்றாலும், விமர்சனம் ரீதியாக விஜய்க்கு அதிருப்தியையே ஏற்படுத்தியது.

எனவே தன்னுடைய அடுத்த படத்தை எப்படியும் வெற்றி படமாக மாற்ற வேண்டும் என 'லியோ' படத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் தளபதி. மேலும் இப்படத்தை கடந்த ஆண்டின் டாப் டக்கர் ஹிட் அடித்த 'விக்ரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு, விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலிருந்து அதிகமாக உள்ளது.


மேலும் இப்படம் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதோடு இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது என்பதும் முக்கியமாகும்.

இப்படியான நிலையில் லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் ரைட்ஸ் மட்டும் 15 கோடி என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அனிரூத்தும் விஜய்யும் இணைவதால் தான் ஆடியோ ரைட்ஸ் இவ்வளவு என்றும் கூறப்பட்டு வருகின்றது.


இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், கதிர், உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை மிகப்பெரிய பொருட்களில் லலித் குமார் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement