• Jun 04 2023

பிக்பாஸ் விக்ரமன் வீட்டில் நடந்த விஷேசம்- வைரலாகும் வீடியோ- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 week ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில்... ஜனவரி மாதம் முடிவடைந்தது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரை அதிகபட்சமாக 16 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மட்டும், 20 போட்டியாளர்கள் முதல் நாளே அதிரடியாக களமிறங்கினர். ஒரு வாரம் கழித்து மைனா வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.

மிகவும் விறு விறுப்பாக,எந்நேரமும் சண்டை சச்சரவுகளுடன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில், வெற்றி பெறுவார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியாளர் என்றால் அது விக்ரமன் தான்.


இதற்கு முக்கிய காரணம், முதல் நாளில் இருந்தே மிகவும் பொறுமையாக தன்னுடைய விளையாட்டை விளையாடி வந்ததோடு தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களையும் நிதானத்துடன் கையாண்டார். இதனை பலமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனே பாராட்டி உள்ளார்.

குறிப்பாக அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும் என கூறும் பலர் விக்ரமன் போன்ற சிறந்த இளைஞர்கள் அரசியல் களத்தில் இருப்பது மிகவும் பெருமை பட வேண்டிய விஷயம் என்றும் கூறி வந்தனர்.பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதில் இருந்து தன்னுடைய அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.


இப்படியான நிலையில் விக்ரமனின் அப்பா இன்றைய தினனம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அப்பாவின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டிய வீடியோவை விக்ரமன் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement