ஜீ தமிழில் ஒளிபரப்பான சிறுவர்களுக்கான இசைப் போட்டியான "சரிகமப சீசன் 4", பார்வையாளர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த நிகழ்ச்சியாக மாறியுள்ளது. பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கள் குரல் திறமையால் பார்வையாளர்களை கவர்ந்திருந்தனர். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற Final எபிசொட் அனைவரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட போட்டியில் பலரை பின்னுக்குத் தள்ளி, திவினேஷ் என்ற சிறுவன் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூ.10 லட்சம் பரிசுத் தொகை திவினேஷின் குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றும் ஒரு முக்கிய அம்சமாக கொடுக்கப்பட்டது.
அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சிறுவன், ஒவ்வொரு எபிசொட்டிலும் தனது பிரமாதமான குரல், பாட்டு தேர்வு மற்றும் மழலைத் தனம் என்பன மூலம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார். திவினேஷ் தனது கதையை மேடையில் பகிர்ந்தபோது, ஒவ்வொருவரும் உணர்ச்சியில் ஆழ்ந்தனர். அவருடைய அப்பா ஒரு சாதாரண வேலைக்காரர். மகனின் கனவை நிறைவேற்ற, பல காலங்களாகப் போராடியுள்ளதாக மிகவும் வேதனையுடன் அந்த சிறுவன் கூறியிருந்தார். மேலும் தனது தந்தைக்கு ஒரு வண்டி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது தனது ஆசை எனவும் தெரிவித்திருந்தார்.
பாடகர் ஸ்ரீநிவாஸ், திவினேஷின் கனவைக் கேட்டு மேடையிலேயே, “அந்த வண்டியை நான் வாங்கிக் கொடுக்கிறேன்” என்று அறிவித்திருந்தார். அந்த நெகிழ்ச்சியான தருணத்தின் தொடர்ச்சியாக, தற்போது வெளியாகிய புகைப்படங்களில், திவினேஷ் தனது அப்பாவிற்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான புதிய வண்டியொன்றை வழங்கியுள்ளார். இந்த போட்டோ தற்பொழுது வைரலாகி வருகின்றது. மேலும் திவினேஷ் தனது ஆசையை நிறைவேற்றிய ஸ்ரீநிவாஸிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
Listen News!