• Sep 21 2023

4-ஆவது நாள் வசூலில் பலத்த அடி வாங்கிய 'குஷி'... வெறும் இத்தனை கோடிதானா..?

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

ஷிவா நிர்வாண இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிப்பில் தற்போது 'குஷி' திரைப்படம் வெளியாகியுள்ளது. தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படமானது காதலை மையமாக கொண்டு அமைந்துள்ளது.


இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த பேராதரவைத் தொடர்ந்து திரையரங்கிற்கு பலரும் படம் பார்க்க குவிந்தனர். இதனால் அதிக வசூலையும் பெற்றுக் கொள்ள முடிந்தது. அந்தவகையில் முதல் மூன்று நாட்களில் ரூ. 65 கோடி வரை உலகளவில் வசூல் செய்து வெற்றி வாகை சூடியது.


ஆனால் எதிர்பாராத விதமாக குஷி படம் 4வது நாள் வசூலில் பலத்த அடிவாங்கியுள்ளது. அதாவது நேற்றைய தினம் உலகம் முழுவதும் ரூ. 3 கோடியை மட்டுமே வசூலித்திருக்கின்றது. ஆகவே 4நாட்கள் முடிவில் குஷி படம் ரூ. 68 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருக்கின்றது. இவ்வாறாக திடீரென குஷி படத்தின் வசூல் சரிந்துள்ளமை படக்குழுவினருக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement