• Aug 24 2025

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வந்த ஆசை... தளபதி ஒத்துக் கொள்வாரா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர்  தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதைத்தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவர் தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் அழுத்தமாக காணப்பட்டதால் தொடர்ந்து முன்னணி   நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும்  பெற்றார்.

தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். தமிழில் விஜய் சேதுபதியுடன் நடித்த படங்கள் இவருக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்த படங்களிலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்.

ஆரம்பத்தில் மிகவும் ஹோம்லியாக நடித்து வந்த ஐஸ்வர்யா தற்போது தன்னுடைய ரூட்டை கவர்ச்சிக்கு மாற்றிக் கொண்டுள்ளார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடிக்கடி புகைப்படங்கள் பகிர்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் ஜுவல்லரி ஷாப் ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் கலக்கலான உடையில் பங்கேற்று அனைவரையும் கவர்ந்திருந்தார்.

இந்த நிலையில் அவரிடம் உங்களுக்கு ஒரு பெரிய பாலிவுட் நட்சத்திரம் அல்லது தென்னிந்திய நடிகருடன் சாப்பிட ஆசை என்றால் அது யாருடன் என கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.

அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இளைய தளபதி விஜய் உடன் டின்னர் சாப்பிட ஆசை என குறிப்பிட்டுள்ளார்.  அவருடைய ஆசை நிறைவேறுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement