• May 18 2024

அச்சு அசல் பொம்மை போலவே இருக்கும் பெண்- நாளுக்கு நாள் அதிகரிக்கும் வியூவர்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பெண்கள் தம்மை அலங்கரிப்பதற்காக பல விடயங்களை செய்து வருவார்கள் அதில் முக்கியமானது தான் மேக்கப். மேலும் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் பெண்கள் தாம் செல்லும் இடத்திற்குச் தகுந்த மாதிரி மேக்கப் போட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளர்.

அந்த வகையில் தற்பொழுது ஸ்ரபியா என்ற பெண் பொம்மை போல தன்னை அலங்கரித்து நிற்கும் வீடியோ ஒன்று தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவைப் பார்த்த பலரும் இவர் பொம்மை போலவே இருக்கின்றார் எனக் கூறி வருகின்றனர்.

இதனால் பிரபல சேனல் ஒன்றின் தொகுப்பாளர் அவரிடம் சென்று இப்படி பொம்மை போல உங்களை அலங்கரித்துக் கொள்வதற்கு காரணம் என்ன இந்த ஜடியா உங்களுக்கு யார் சொன்னது என்று கேட்டார். அதற்கு பதில் கூறிய அவர் என்னுடைய மேக்கப் ஆட்டிஸ்ட் தான் இந்த ஐடியா சொன்னாங்க.

அதன்படி மேக்கப் போட்டு வீடியோ வெளியிட்டோம். முதல் வீடியோவே 15 மில்லியன் வியூவர்ஸை கடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது இப்படி மேக்கப் பண்ணி வீடியோ வெளியிட்ட வருகின்றோம் என அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement