பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று,மயில் பாக்கியம் கிட்ட இண்டையோட எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சிடும் நாளைக்கு வீட்ட கூட்டிகொண்டு போய்டுவாங்க என்று தானே சொன்னீங்க. ஆனா, இப்ப என்ர வாழ்க்கை எந்த முடிவும் இல்லாமல் போச்சு என்கிறார். அதுக்கு பாக்கியம் நாங்களும் அப்புடி எல்லாம் நடக்கும் என்று நினைச்சுப் பார்க்கவே இல்ல என்கிறார்.
அதனை அடுத்து பாக்கியம் சரவணனோட பிடிவாதத்தை மாத்திக் காட்டுவோம் என்கிறார். மேலும் எல்லாமே நல்லா நடக்கும் நான் பார்த்துக்கிறேன் என்கிறார் பாக்கியம். அதைக் கேட்ட மயில், பார்த்துக்கிறேன் என்று சொல்லி என்ன இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிட்டியே என்று சொல்லி அழுகிறார். இதனைத் தொடர்ந்து பாக்கியம் மயில் கிட்ட வக்கீலுக்கு தாலியை அடமானம் வைச்சுத் தான் பணம் கொடுத்தேன் என்கிறார்.

அத்துடன், இதெல்லாம் செய்தது உனக்காக மட்டும் தான் என்கிறார் பாக்கியம். பின் இந்த அம்மாவ நம்பு என்கிறார். மறுபக்கம், கோமதி பழனியைப் பார்த்து என்னை மன்னிச்சுடு என்று சொல்லி அழுகிறார். அதுக்கு பழனி கோபத்தில ஒவ்வொருத்தரும் கதைக்கிறது தான் அதை எல்லாம் பெருசா எடுக்காத என்கிறார். பின் பாண்டியனும் பழனி கிட்ட மன்னிப்புக் கேட்கிறார்.
அதைத் தொடர்ந்து காந்திமதி கெட்டதிலயும் ஒரு நல்லது என்ற மாதிரி இவ்வளவு நாளா நான் ஆசைப்பட்ட விஷயம் இன்னைக்கு நடந்திருச்சு என்று சக்திவேல் கிட்ட சொல்லி சந்தோசப்படுறார். அதுக்கு முத்துவேல் என்னதான் இருந்தாலும் கோமதி என் கூட பிறந்த தங்கச்சி அவங்கள எப்படி விடுவோம் என்கிறார். பின் செந்தில் மீனா கிட்ட சரவணனை பற்றிச் சொல்லி கவலைப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!