• May 06 2024

அடுத்த நயன்தாரா ஐஸ்வர்யா ராஜேஷ் தான்…காரணம் என்ன தெரியுமா?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் குரூப் டான்ஸர்களில் ஒருவராக நுழைந்து தன்னுடைய திறமையாலும், அழகினாலும் கதாநாயகி என்றளவிற்கு உயர்ந்து நிற்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட போதோ அல்லது 'அசத்தப் போவது யாரு' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதோ இவர் மக்கள் மத்தியில் பிரபல்யமாகி இருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து இவர் நடித்த 'ரம்மி' திரைப்படமே சினிமா உலகில் இவருக்கென்று ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. இவர் கதாநாயகி என்ற இந்த இடத்தைப் பிடிப்பதற்காக பட்ட கஷடங்கள், அவமானங்கள் ஏராளம். அதாவது இவர் முதலில் சினிமாவில் நடிக்க வந்த போது இயக்குநர் ஒருவர் இவரை பார்த்து "உனக்கு ஹிரோயினாக நடிப்பதற்கு தகுதியே கிடையாது" என அவமானப் படுத்தியிருக்கின்றார். இதற்காகவே இவர் கடுமையாக உழைத்து இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கின்றார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் வருடத்திற்கு பத்து படங்கள் நடித்திருந்தாலும் அதில் குறைந்தது எட்டு படங்களாவது ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமாகி பேசு பொருளாக மாறிவிடும். அதுமட்டுமல்லாது இவர் சமீபகாலமாகவே பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

இதற்கு எடுத்துக்காட்டாக தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா, ராசி கண்ணா ஆகியோருடன் இவர் இணைந்து நடித்திருந்த 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' என்ற படத்தைக் குறிப்பிடலாம். அதில் இவர் கிராமத்து வெள்ளந்தி மனைவியாக நடித்திருக்கின்றமை யாராலும் மறக்க முடியாது.

அதேபோன்று 'க/பெ ரணசிங்கம்' என்ற படத்தில் வெளிநாட்டில் உயிரிழந்த தனது கணவனை தமிழ் நாட்டுக்கு கொண்டுவரப் போராடும் சிங்கப்பெண்ணாக நடித்திருக்கின்றார். அத்தோடு 'திட்டம் 2' என்ற த்ரில்லர் படத்தில் பல பெண்களுக்கு உதாரணமாக இருக்கின்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பிரமிக்கச் செய்திருக்கின்றார்.

இவற்றை போன்றே 'கனா' என்ற படத்திலும் தந்தையின் கனவை நனவாக்கும் கிரிக்கெட் வீரராக நடித்திருக்கின்றார். இவ்வாறாக தொடர்ந்து பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல படங்களில் நடித்து வருகின்ற ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்து அவரின் ரசிகர்கள் "அடுத்த நயன்தாரா இவர்தான்" எனக் கூறி வருகின்றார்கள். இதற்கான காரணம் நயன்தாராவும் சமீபகாலமாக தொடர்ந்து பெண்களிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களிலே நடித்து வந்தமை தான்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement