• May 04 2024

இந்தியப் பிரதமராக நடிக்கும் பிரபல நடிகை…டீசர் வெளியீடு

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் ஹீரோயின்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் அதிகளவில் ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருபவராக இருந்தாலும், தமிழிலும் 'தாம் தூம்', 'தலைவி' என விரல் விட்டு எண்ணக் கூடிய வகையில் ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார்.

இவ்வாறாக தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகின்ற நடிகை கங்கனா ரானவத் தற்போது "எமர்ஜென்சி" என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினுடைய டீசர் தற்போது வெளியாகி இருக்கின்றது. இதில் அவர் அச்சு அசலாக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி போலவே நடித்திருக்கின்றார். இந்த டீசரில் கங்கனா ரானவத் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் தோற்றத்துடன் கூடிய கண்கண்ணாடி மற்றும் காட்டன் சேலையுடன் மாஸ் லுக்கில் உள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படமானது இந்திய ஜனநாயகத்தின் இருண்ட நேரம் என்று அழைக்கப்படும் சகாப்தத்தை எடுத்துச் சொல்லும் படைப்பாக இருக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இவ்வாறாகப் பலரும் எதிர்பார்ப்போடு இருக்கும் வேளையில் இந்த படம் இந்திரா காந்தியின் வரலாறு அல்ல என்று சமீபத்தில் வேதனையுடன் கூறி இருந்தார் கங்கனா ரானவத்.

மேலும் இந்தப் படம் தொடர்பில் அவர் கூறுகையில் "இந்திய வரலாற்றில் முக்கிய ஒரு காலகட்டத்தை இப்படம் பிரதிபலிக்கின்றது, திரையில் எப்போதுமே ஒரு பிரபல நபராக நடிப்பது என்பது கடினம், அந்த நபரின் தோற்றம், ஆளுமை, குணாதிசயங்களை சரியாகப் பெற வேண்டும்" எனவும் கூறி இருக்கின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement